கடந்த சில நாட்களாகவே கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் பல்வேறு இடங்களில் அதிகப்படியான வெப்பம் பாடி வந்த நிலையில், நேற்றைய தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்துள்ளது.
கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, கலெக்டர் ஆபீஸ், கிருஷ்ணகிரி நகர் புறப்பகுதி, காவேரிப்பட்டினம், வேலம்பட்டி, ஓசூரில் சில பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக சில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
இரவு நேரத்தில் பெய்த இந்த மழையால் வெப்பம் நீங்கி சற்று குளிர்ச்சி மழை வந்துள்ளது கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.