கிருஷ்ணகிரி: கடும் விலை சரிவு எதிரொலி; காவேரிப்பட்டினம் தென்பெண்ணை ஆற்றில் 3 டன் மல்லிகைப் பூக்கள் கொட்டி போராட்டம்!

விலை வீழ்ச்சியால் தென்பெண்ணை ஆற்றில் கொட்டப்பட்ட 3 டன் மல்லிகை பூக்கள் காவேரிப்பட்டினம் விவசாயிகள் வேதனை.

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மல்லிகை பூக்கள் விளைச்சல் அதிகம். ஆனால் இப்பொழுது பூக்களுக்கு பூதி விலை கிடைக்காததால் வேதனை அடைந்த விவசாயிகள் தன் கணக்காக மல்லிகை பூக்களை ஏறிகளும் ஆறுகளிலும் கொண்டு சென்ற சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பறிப்பு கூலி கூட இல்லை

கடும் விலை வீழ்ச்சியால் சந்தைக்குப் பூக்களின் வரத்து அதிகரித்தாலும் சென்ட் ஆலைகள் இல்லாத நாளும் அன்றாடும் விவசாயிகள் தங்களுடைய தோட்டத்தில் பூக்கும் மல்லிகை பூக்களை ஆட்கள் வைத்து பறிப்பதற்கு கூட கூலியில்லாமல் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகின்றன. வாகன வாடகைக்கு கொடுத்து சந்தைக்கு கொண்டு சென்றும் வியாபாரிகள் வாங்க மறுத்ததால் வேறு வழி என்று விவசாயிகள் தங்களுடைய 3 டன் மல்லிகை பூக்களை தென்பெண்ணை ஆற்றில் கொட்டி விட்டு சென்றது மிகவும் வேதனை அளிக்கிறது.

சென்ட் ஆலை தேவை
Krishnagiri Local news
Krishnagiri Local news

இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு குறிப்பாக காவேரிப்பட்டணத்தில் , சென்ட் ஆலை நிறுவ வேண்டும் என்றும் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் நிலை நிறுத்த முடியும் எனவும் , சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் அதிகப்படியான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. இதை தமிழக அரசு கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

krishnagirionline,in
krishnagirionline,in

1 thought on “கிருஷ்ணகிரி: கடும் விலை சரிவு எதிரொலி; காவேரிப்பட்டினம் தென்பெண்ணை ஆற்றில் 3 டன் மல்லிகைப் பூக்கள் கொட்டி போராட்டம்!”

Leave a Comment